வியாழன், 20 அக்டோபர், 2011

MEGA வழக்கு! நவம்பர் 1 க்கு ஒத்திவைப்பு

News ID # 7401

வியாழன், அக்டோபர் 20, 2011
MEGA வழக்கு! நவம்பர் 1 க்கு ஒத்திவைப்பு!
செய்தி: காயல்பட்டணம்.காம்This page has been viewed 200 times View Comments (1) <> Post Your Comment
(Comments awaiting approval - 1; Comments not approved - 1)
காயல்பட்டின நகர்மன்றத் தலைவர் பதவியை பெண்களுக்கு ஒதுக்கிய அரசாணைக்கு எதிராக, MEGA வின் பிரதிநிதியும், மக்கள் சேவாக்கரங்கள் நிறுவனருமான பாலப்பா ஜலாலி மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். MEGA சார்பாக வழக்கறிஞர்கள் ஏ. ஹாஜா முஹியத்தீன் மற்றும் எம். முஹம்மது செர்புதீன் ஆகியோர் இவ்வழக்கினை வாதிடுகின்றனர். வழக்கு விசாரணை கடந்த வியாழன் அன்று (அக்டோபர் 13) நடைபெற்றது. MEGA பிரதிநிதி பாலப்பா ஜலாலி மதுரை உயர் நீதி மன்றம் சென்றிருந்தார். மீண்டும் வழக்கு வெள்ளி ((அக்டோபர் 14) அன்று தொடரும் என அறிவிக்கப்பட்டது. இருப்பினும் அன்று (அக்டோபர் 14) வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தை புறக்கணித்ததால் வழக்கு விசாரிக்கப்படவில்லை. அக்டோபர் 17 அன்று தேர்தலினை முன்னிட்டு நீதிமன்றத்திற்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. மீண்டும் அக்டோபர் 18 (செவ்வாய்) அன்று வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் வழக்கினை நவம்பர் 1 க்கு ஒத்திவைப்பதாக அறிவித்தனர். தகவல்:கவிமகன் காதர்,செய்தி தொடர்பாளர், MEGA.
municipality election mega court legal madurai high court reservation women rotation

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

b