வெள்ளி, 12 ஆகஸ்ட், 2011

| சொத்துகுவிப்பு வழக்கு: ஜெ., மனு தள்ளுபடி Dinamalar

Jaya's plea for exemption from personal appearance rejected | `சொத்துகுவிப்பு வழக்கு: ஜெ., மனு தள்ளுபடி சொத்துகுவிப்பு வழக்கு: ஜெ., மனு தள்ளுபடி பெங்களூரு: வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில், முதல்வர் ஜெயலலிதா சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை பெங்களூரு சிறப்பு கோர்ட் தள்ளுபடி செய்தது. வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக முதல்வர் ஜெயலலிதா மீது தொடரப்பட்ட வழக்கு பெங்களூரு சிறப்பு கோர்ட்டில் நடந்து வருகிறது. இந்த வழக்கில் நேரில் ஆஜராக கோர்ட் உத்தரவிட்டது. இந்நிலையில் இந்த வழக்கில் நேரில் ஆஜராகுவதில் இருந்து விலக்கு அளிக்கக்கோரியும், வீடியோ கான்பரன்சிங் மூலம் வாக்குமூலம் அளிக்க அனுமதி கோரியும் முதலவர் ஜெயலலிதா மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு மீதான விசாரணை சிறப்பு கோர்ட் நீதிபதி பி எம் மல்லிகார்ஜூனையா முன் விசாரணைக்கு வந்தது. அப்போது முதல்வர் ஜெயலலிதா தாக்கல் செய்த மனுவை நீதிபதி தள்ளுபடி செய்தார். தனது வாக்குமூலத்தை எழுத்து மூலம் தாக்கல் செய்ய அனுமதி கோரியும், வீடியோ கான்பரன்சிங் மூலம் வாக்குமூலம் அளிக்க அனுமதி கோரியும் ஜெ., தாக்கல் செய்த மனுவை நீதிபதி தள்ளுபடி செய்தார். மேலும், தமிழக சட்டசபையில் பட்ஜெட் கூட்டம் நடந்து கொணடிருப்பதாலும், முதல்வராக ஜெயலலிதா உள்ளதாலும், வழக்கு விசாரணையை செப்டம்பர் 14ம் தேதிக்கு தள்ளி வைக்க வேண்டும் என்று ஜெ., தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பி குமார் விடுத்த வேண்டுகோளையும் நீதிபதி நிராகரித்தார்.


1 கருத்து:

b