தூத்துக்குடி: தி.மு.க., நகர செயலரை கொலை செய்ய தூண்டிய வழக்கில், திருச்செந்தூர் தி.மு.க., எம்.எல்.ஏ., அனிதா ராதாகிருஷ்ணன் நேற்று கைது செய்யப்பட்டார். தி.மு.க.,வில் கைதாகியுள்ள இரண்டாவது எம்.எல்.ஏ., இவர். ஏற்கனவே, நில மோசடி வழக்கில், சேப்பாக்கம் தொகுதி தி.மு.க., எம்.எல்.ஏ., அன்பழகன் கைதாகி, சென்னை சிறையில் உள்ளார். திருச்செந்தூர் அருகேயுள்ள ஆறுமுகநேரி தி.மு.க., நகர செயலர் சுரேஷ், 37. இவர், கடந்த மார்ச் 1ல், முன்னாள் துணை முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாள் விழாவை கொண்டாடியபோது, அந்த மேடை அருகிலேயே மர்ம நபர்களால் கத்தியால் குத்தப்பட்டார். இச்சம்பவம் தொடர்பாக சுரேஷ் புகாரில், பெயர் குறிப்பிடாமல் இரு மர்ம நபர்கள் என, போலீசார் வழக்கு பதிவு செய்தனர். கொலை முயற்சி வழக்கு தொடர்பாக, ஆறுமுகநேரி சசிக்குமார், ஸ்ரீவைகுண்டம் கோர்ட்டில் சரணடைந்தார். மணிகண்டன் கைது செய்யப்பட்டார். சசிக்குமார், கடந்த ஜூலை 10ல், நாலுமாவடி அருகே படுகொலை செய்யப்பட்டார். இவ்வழக்கில், ஆறுமுகநேரி நகர தி.மு.க., செயலர் சுரேஷ் உட்பட ஆறுபேரை, குரும்பூர் போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து நாட்டுத் துப்பாக்கிகள், தோட்டாக்கள், ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் இருவரை தேடிவருகின்றனர்.
இவ்வழக்கில் சுரேஷிடம் போலீசார் விசாரித்தபோது, "நான், மாவட்ட தி.மு.க., செயலர் பெரியசாமி அணியைச் சேர்ந்தவன். திருச்செந்தூர் எம்.எல்.ஏ., அனிதா ராதாகிருஷ்ணன் எங்களுக்கு எதிரணியைச் சேர்ந்தவர். இந்த முன்விரோதத்தில், மார்ச் 1ல், சசிக்குமார் உள்ளிட்ட இருவர் என்னை கொலை செய்ய முயன்றனர். இதற்கு எம்.எல்.ஏ., அனிதா ராதாகிருஷ்ணன் தூண்டுதல் தான் காரணம். அதற்கு பழிவாங்கும் விதமாகவே சசிக்குமாரைக் கொன்றோம்' எனக்கூறியுள்ளார்.
அனிதா ராதாகிருஷ்ணன் திடீர் கைது: தூத்துக்குடி டூவிபுரத்திலுள்ள வீட்டில் அனிதா ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ.,வை, ஏ.டி.எஸ்.பி., சாமித்துரை வேலு தலைமையிலான போலீசார், நேற்று மாலை, 3.30 மணியளவில் கைது செய்தனர். முதலில் சிப்காட் போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்துச் சென்றனர். பின்னர், அங்கிருந்து, 35 கி.மீ., தூரத்திலுள்ள ஸ்ரீவைகுண்டம் போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்துச் சென்றனர். என்ன காரணத்திற்காக அவர் கைது செய்யப்பட்டார் என, மாலை 5.30 மணி வரை தெரியவில்லை.
ஆறுமுகநேரி நகர தி.மு.க., செயலர் சுரேஷை கொலை செய்ய முயன்ற வழக்கில் கைதானவர்கள் தந்த வாக்குமூலத்தின் அடிப்படையிலும், பின்னர் சசிக்குமார் கொலை வழக்கு விசாரணையின் போது சுரேஷ் தந்த வாக்குமூலத்தின் அடிப்படையிலும், தி.மு.க., நகர செயலர் சுரேஷை கொலை செய்ய தூண்டியதாக, அனிதா ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ., கைது செய்யப்பட்டார் என, போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதே வழக்கில் அனிதா ராதாகிருஷ்ணன் ஆதரவாளரான ஆல்நாத் என்ற தி.மு.க., பிரமுகரையும் போலீசார் பிடித்து விசாரிக்கின்றனர்.
மாவட்ட செயலருக்கு அனுமதி மறுப்பு : கைது செய்யப்பட்ட திருச்செந்தூர் எம்.எல்.ஏ., அனிதா ராதாகிருஷ்ணனை சந்தித்து பேச, தூத்துக்குடி மாவட்ட தி.மு.க., செயலர் பெரியசாமிக்கு போலீசார் அனுமதியளிக்கவில்லை. தி.மு.க., நகரச் செயலரை கொலை செய்ய தூண்டிய வழக்கில் கைது செய்யப்பட்ட அனிதா ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ., பலத்த பாதுகாப்புடன் தூத்துக்குடியிலிருந்து மாலை 6 மணிக்கு, ஸ்ரீவைகுண்டம் போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்து வரப்பட்டார். அங்கு, அவரிடம் மேல்விசாரணை நடந்தது. இதனிடையே, தூத்துக்குடி மாவட்ட தி.மு.க., செயலர் பெரியசாமி, நிர்வாகிகள் அங்கு வந்தனர்.
அனிதா ராதாகிருஷ்ணனை சந்திக்க, பெரியசாமி உள்ளிட்டோர் அனுமதி கேட்டனர். ஆனால், அதற்கு போலீசார் அனுமதியளிக்கவில்லை. இதனால், தி.மு.க.,வினர் போலீசாரோடு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இரவு 7.40 மணியளவில் அனிதா ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ., ஸ்ரீவைகுண்டத்திலிருந்து அழைத்துச் செல்லப்பட்டார். திருச்செந்தூர் அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷனுக்கு இரவு 8.20 மணிக்கு கொண்டு வரப்பட்டார்.
புதன், 10 ஆகஸ்ட், 2011
தி.மு.க.,வைச் சேர்ந்த அனிதா ராதாகிருஷ்ணன் கைது : கொலை முயற்சி வழக்கில் போலீஸ் அதிரடி Dinamalar
DMK MLA Anitha Radhakrishnan arrested | தி.மு.க.,வைச் சேர்ந்த அனிதா ராதாகிருஷ்ணன் கைது : கொலமுயற்சி வழக்கில் போலீஸ் அதிரடி Dinamalar
தி.மு.க.,வைச் சேர்ந்த அனிதா ராதாகிருஷ்ணன் கைது ஸ்ட் 10,2011,23:28 IST
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
in tha ammaiyaaruku pali vaangum paithiyam thodar hirathu
பதிலளிநீக்குஜெயா அரசின் பழிவாங்கும் படலம் தொடர்கிறது .அனிதா கைது
பதிலளிநீக்குஉப்பு தின்னவன் தண்ணி குடிச்சே ஆகணும்... எவனா இருந்தா எனக்கென்ன?
பதிலளிநீக்கு