புதிய தலைமைச் செயலகம், கோபாலபுரம் பணத்தில் கட்டப்படவில்லை என, மா.கம்யூ., தலைவர் சவுந்தரராஜன் சொல்லியிருக்கிறாரே?கோபாலபுரத்தில் உள்ள என் வீட்டை, பதிவாளர் முன்னிலையில் மருத்துவமனைக்காக, அறக்கட்டளைக்கு எழுதிக் கொடுத்து விட்டேன். புதிய தலைமைச் செயலக கட்டடத்தில் அனைத்து வசதிகளும் செய்து, திறப்பு விழா செய்த பின், அதை மருத்துவமனையாக மாற்றினால் எவ்வளவு செலவாகும்? மக்களுடைய வரிப்பணத்தை வீணாக்கும் முயற்சிக்கு, மா.கம்யூ., உடந்தையாக இருக்க முயற்சிக்கலாமா?சென்னை பொதுமருத்துவமனைக்கு அருகில் இருந்த மத்திய சிறைச் சாலை, புழலுக்கு மாற்றியதால், அந்த இடத்தில் மருத்துவக் கல்லூரி கட்டடம் அமைக்கவும் நிதி ஒதுக்கினீர்கள்.
இந்நிலையில், புதிய தலைமைச் செயலக கட்டடத்தை புதிய மருத்துவமனையாகவும், பிளாக் பி கட்டடத்தில் புதிய மருத்துவக் கல்லூரியும் அமையும் என ஜெயலலிதா அறிவித்துள்ளாரே?அதைத் தான் மயிலை மாங்கொல்லை கூட்டத்தில் துக்ளக் தர்பார் என சொன்னேன். கடந்த ஆட்சியில் அறிவிக்கப்பட்ட எதையும் மாற்ற வேண்டும் என்பதில் பிடிவாதமாக இருக்கின்றனர். அதனால் மக்கள் பணம் தான் விரயமாகுமே தவிர, தி.மு.க.,வுக்கு எந்த இழப்பும் இல்லை.
புதிய தலைமைச் செயலகம் சரியாக கட்டவில்லை என கூறியவர்கள், அங்கு புதிய மருத்துவமனை அமைத்தால், அப்போது அந்த கட்டடத்தின் தரம் சரியாகி விடுமா?தி.மு.க., ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட விவசாய தொழிலாளர்கள், விவசாயிகள் சட்டம் 2006, விவாதமின்றி சட்டசபையில் ரத்து செய்யப்பட்டிருக்கிறதே?
தி.மு.க., அரசு கொண்டு வந்தது என்பது தான்.
தி.மு.க., அரசு கொண்டு வந்தது என்பது தான்.
விவசாயிகளின் பாதுகாப்பிற்காக, விவசாய தொழிலாளர் நல வாரியம் அமைக்கப்பட்டு, 1.74 கோடி உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டு, அவர்களில், 8.72 லட்சம் விவசாய குடும்பங்களுக்கு, 684.2 கோடி ரூபாய் உதவி தொகை வழங்கப்பட்டது. அ.தி.மு.க, அரசை ஆதரிக்கும் மா.கம்யூ., கட்சி கூட இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது, ஆறுதல் அளிக்கிறது.
இவ்வாறு கருணாநிதி தெரிவித்துள்ளார்.
இவ்வாறு கருணாநிதி தெரிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக