வெள்ளி, 2 செப்டம்பர், 2011

| கவர்னரைச் சந்தித்தார் கருணாநிதி

சென்னை:தமிழகத்தின் புதிய கவர்னர் ரோசய்யாவை, முன்னாள் முதல்வர் கருணாநிதி மரியாதை நிமித்தமாக நேற்று சந்தித்துப் பேசினார். தமிழகத்தின் புதிய கவர்னராக ரோசய்யா பதவியேற்றுள்ளார். முன்னாள் முதல்வர் கருணாநிதி, அவரைச் சந்திக்க நேற்று காலை 11 மணிக்கு ராஜ்பவன் சென்றார். அங்கு, கவர்னர் ரோசய்யாவை 20 நிமிடங்கள் சந்தித்துப் பேசினார். ரோசய்யா தன் குடும்பத்தினரை கருணாநிதிக்கு அறிமுகப்படுத்தினார். இதையடுத்து, பத்திரிகையாளர்களின் கேள்விக்கு கருணாநிதி பதிலளிக்கையில், "கவர்னர் ரோசய்யா, என் நீண்ட கால நண்பர். அவரை மரியாதை நிமித்தமாகவே சந்தித்தேன்.தமிழக அரசின் கேபிள் "டிவி' துவக்கியதற்கும், தி.மு.க., ஆட்சியில் அத்திட்டம் முறைப்படி செயல்படுத்தப்படவில்லை என்ற குற்றச்சாட்டிற்கும் மகிழ்ச்சி. தூக்குத் தண்டனைக் கைதிகள் சம்பந்தமான மனு எதுவும் கவர்னரிடம் கொடுக்கவில்லை' என்றார்.கருணாநிதியுடனான சந்திப்பிற்குப் பிறகு, ஒரு மூத்த அரசியல் தலைவரை சந்தித்ததில் மகிழ்ச்சியடைந்ததாக கவர்னர் ரோசய்யா கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

b