செவ்வாய், 10 ஜனவரி, 2012

வியாழன், 5 ஜனவரி, 2012

AL QURAN.

4:112 وَمَن يَكْسِبْ خَطِيئَةً أَوْ إِثْمًا ثُمَّ يَرْمِ بِهِ بَرِيئًا فَقَدِ احْتَمَلَ بُهْتَانًا وَإِثْمًا مُّبِينًا மேலும், எவன் ஒரு தவறையோ அல்லது பாவத்தையோ சம்பாதித்துவிட்டு அப்பால் அதனை ஒரு நிரபராதி மீது வீசி விடுகிறானோ அவன் நிச்சயமாக அவதூற்றையும், பகிரங்கமான பாவத்தையும் சுமந்து கொள்கின்றான்.

திங்கள், 12 டிசம்பர், 2011

கண்ணாடிகள் கவனம். = M அப்துல் ரஹ்மான் M.P.


நமது சமுதாயம் சந்தித்து வருகின்ற பிரச்னைகளில் மிக முக்கியமானது வரம்பு மீறிய காதல் பிரச்னைதான். ஓடிப்போகும் சீரழிவுச் செய்தி எல்லாப் பகுதிகளிலிருந்தும் நீக்கமற வந்த வண்ணமிருக்கின்றன. இதற்கெல்லாம் இதுதான் காரணமென்று பொத்தம்பொதுவாய் ஒன்றைச் சொல்ல முடியாது. செல்போன், சின்னத்திரை, பெரிய திரை, கல்வி நிலையங்களில் கலந்து பழகுதல் எனப் பல காரணங்களைச் சொல்லலாம். காரணம் எதுவாயினும் சரி செய்யப்பட வேண்டிய தலையாய விசயம் இது. இந்தப் பொறுப்பும் கடமையும் பெற்றோர்களையே சாருகின்றது.

பெற்றோர்களின் கவனக்குறைவினால்தானே அவர்கள் கீழிறங்கிப் போகின்றார்கள். செல்போன், தொலைக்காட்சி, இணையதளம் ஆகிய வசதிகளை ஏற்படுத்தித் தருவதோடு பெற்றோர்களின் பங்கு முடிந்து விடுவதில்லை. அதை அவர்கள் எப்படிப்பயன்படுத்த வேண்டும் என்பதைச் சொல்லித்தர வேண்டும். அதன் நன்மை தீமைகளை விளக்கித் தர வேண்டும். தீவிர கண்காணிப்பும் வேண்டும். மீறும்போது கண்டிக்கவும் வேண்டும்.
தொடர்ந்து தொலைக்காட்சி பார்க்கும்போது அதில் காட்டப்படும் கற்பனைக் காட்சிகளால் ஈர்க்கப்படும் பிள்ளைகள் இளமைக்கால தூண்டுதலால் தானும் அதுபோல செய்ய வேண்டுமென உந்தப்படுகிறார்கள். பிள்ளைகளை வைத்துக்கொண்டே தொடர்நாடகங்கள், சினிமாக்களைப் பார்க்கின்றோம். வரம்பு மீறிய காட்சிகளைப் பார்க்கும் சூழலை நாமே உருவாக்கித் தருகின்றோம். பெற்றோர்கள் நல்ல முன்மாதிரிகளாக இருந்து தொலைக்காட்சித் தொடர்களைப் பார்ப்பதைத் தவிர்க்க வேண்டும்.

நம் பிள்ளைகள் தனி அறையில் நீண்டநேரம் யாரோடு பேசிக்கொண்டிருக்கின்றார்கள்? என்பதைக் கண்காணிக்க வேண்டும். அவர்களின் கல்லூரி நண்பர்கள் யார்? யாரோடெல்லாம் பழகுகின்றார்கள் என்பதையும் கவனிக்க வேண்டும். செலவுகளுக்காக அதிகமாகப் பணம் கொடுப்பதையும் தவிர்க்க வேண்டும். அதிக நகைகளை அணிவிக்காமலிருப்பதும், நகைகள் இருக்குமிடம், பணப்புழக்கம் அவர்களுக்குத் தெரியாமலிருப்பதும் நல்லது. ஏனென்றால் ஓடிப்போகலாம் என்று அவர்கள் முடிவெடுக்கும்போது பணபலமும் அவர்களுக்குச் சக்தி ஊட்டும் அம்சமாக இருக்கலாம். நம் பிள்ளைகளின் உரிமைகளில் தலையிடலாமா? என்றெல்லாம் பார்க்காமல் அவர்களின் நலன்களைக் கருதி கண்காணிக்க வேண்டும். ‘படியில் பார்த்து இறங்கு’ என்று சொல்வது அவர்கள் ‘கீழே விழப் போகிறார்கள்’ என்பதற்காக அல்ல. ‘கீழே விழுந்து விடக்கூடாது’ என்பதற்காகத்தான். எல்லாவற்றிற்கும் மேலாக இறையச்சத்தையும், மறுமைச் சிந்தனைகளையும் ஊட்டி வளர்க்க வேண்டும். ஒழுக்க மாண்புகளை விதைக்க வேண்டும். 

குர்ஆனும், நபி (ஸல்) அவர்களின் அழகிய வாழ்வுமுறைகளையும் தெளிவாகப் போதித்தாலே அவர்கள் சிறந்தவர்களாக வளர்வதற்குப் போதுமானதாகும். பெண்கள் கண்ணாடிகளைப் போன்றவர்கள் என்றார்கள் நபி (ஸல்) அவர்கள். பெண்களை கண்ணாடியைப் போன்று பாதுகாக்க வேண்டும். கை தவறினால் கீழே விழுந்து உடைந்து நொறுங்கும். நம் காலையே அது குத்திக் கிழிக்கும். கவனமோடு நம் பிள்ளைகளை வளர்ப்போம். கண்ணாடிகள் கவனம்.

M அப்துல் ரஹ்மான் M.P.
வேலூர் பாராளுமன்ற உறுப்பினர்
ஹைர உம்மத்- அக்டோபர் - டிசம்பர் 2011

ஞாயிறு, 4 டிசம்பர், 2011

ஜெயா ஆட்சி நாசமா போகும் சீமான் பேச்சு


ஜெயா ஆட்சியில் மரம் ,செடி ,கொடி எல்லாம் கண்ணீர் வடிக்கும் அவல நிலை


தமிழகத்தில் அ.தி.மு.க., ஆட்சி அமைந்து, புது அமைச்சரவை பதவியேற்ற மூன்று மாதத்திற்குள், மூன்று முறை அமைச்சரவை மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதனால், மக்கள் மத்தியில் மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தி, இப்போது யாரை பார்த்தாலும், மீண்டும் அமைச்சரவை மாற்றம் இருக்காமே என்ற பேச்சு அடிபடுகிறது. பொதுமக்களே ஆர்வமாக இருக்கும் போது, பதவியில் உள்ளவர்கள், பதவிக்கு வரத் துடிப்போர் மத்தியில் எப்படி மனஓட்டம் இருக்கும்.
தமிழக சட்டசபைத் தேர்தலில், அ.தி.மு.க., அமோக வெற்றி பெற்று ஆட்சி பொறுப்பை ஏற்றதும், முதல்வர் ஜெயலலிதா அமைச்சரவையில் புதுமுகங்களுக்கு வாய்ப்பு அளித்தார். சீனியர்களை விட்டு விட்டு நமக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதே என்று ஆச்சர்யப்பட்டவர்கள் இதை தக்க வைக்க வேண்டுமே என பயந்தும் போயினர்.பரிகார பூஜைகள்:இதன் காரணமாக, அமைச்சர்களாக பதவியேற்றதும், கோட்டையில் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட அறையில் போய் அமர்வதற்கு கூட, பரிகார பூஜைகள் செய்தும், நாள், நட்சத்திரம் பார்த்தும் இருக்கின்றனர். இதற்கு காரணம் இருக்கிறது, கடந்த ஆட்சியில் அமைச்சர்களாக இருந்தவர்கள், இப்போது வழக்குகளில் சிக்கி சிறையில் உள்ளனர். இவர்கள் ராசி நமக்கும் ஒட்டிக்கொள்ள போகிறது என்று, அமைச்சர்களுக்கு ஒதுக்கப்பட்ட அறைகளில் வாஸ்துப்படி சிறு சிறு மாற்றங்களை செய்து, பூஜைகள் நடத்தி, பக்தி மணம் கமழ அறைகளை மாற்றியவர்களும் உண்டு. தங்கள் மேஜையில் முதல்வர் படத்துடன், தங்கள் இஷ்ட தெய்வங்களின் படங்களையும் வைத்துள்ள அமைச்சர்களும் உள்ளனர். அதேபோல், அமைச்சர்கள் குடியிருப்பதற்காக, அடையாறில் பசுமை வழி சாலையில், அமைச்சர்களுக்கு வீடுகள் ஒதுக்கப்பட்டன. இவ்வாறு ஒதுக்கப்பட்ட வீடுகள், பொதுப்பணித் துறையின் கட்டுப்பாட்டில் வருகிறது. தங்களுக்கு ஒதுக்கப்பட்ட வீடுகளை அமைச்சர்கள் போய் பார்த்து, வாஸ்து நிபுணர்களின் துணையுடன் சில மாற்றங்களை செய்தனர். தொடர்ந்து அமைச்சராக நீடிப்பதற்காக என்ன என்ன செய்ய வேண்டும், வாசல் எங்கே இருக்க வேணடும்,அலுவலக அறை எங்கே இருக்க வேண்டும் என பார்த்து பார்த்து, வீட்டையே முற்றிலுமாக மாற்றிய அமைச்சர்களும் இருக்கின்றனர். பெரிய மாற்றங்களை செய்ய முடியாது என்றாலும், சிறு சிறு மாற்றங்களை செய்துள்ளனர்.

கிலியும் வாஸ்துவும்: சமீபத்தில் அமைச்சரவையில் இருந்து ஆறு அமைச்சர்கள் நீக்கப்பட்டனர்; சிலரது இலாகாக்கள் மாற்றப்பட்டன. இதன் பிறகு தான் அமைச்சர்கள் மத்தியில், "கிலி' அதிகமானது. அதுவரை வாஸ்து பார்க்காதவர்கள் கூட, தாங்கள் குடியிருக்கும் வீடுகளில் அதிரடி மாற்றங்களை செய்து பரிகார பூஜையும் நடத்தியுள்ளனர். இதற்கும் மேல் போய், இலாகாக்களை பறிகொடுத்த அமைச்சர்கள் தங்கள் வீட்டைச் சுற்றியுள்ள மரங்கள், வாஸ்துப்படியும் தங்கள் நட்சத்திரத்திற்கு பொருத்தமாக இருக்கிறதா என ஜோசியம் பார்த்து, மரங்களை அப்புறப்படுத்த உத்தரவிட்டுள்ளனர். பசுமை வழி சாலையில் அமைச்சர்கள் குடியிருப்பில் உள்ள மரங்கள் ஒவ்வொன்றும் நீண்ட ஆயுள் கொண்டவை. இரண்டு பேர் சேர்த்து கட்டிப் பிடிக்கும் அளவு சுற்றளவு கொண்டது.

ஒண்ணை சொன்னா... கூட இரண்டு: இந்த மரங்களை வெட்டுவதன் மூலம், 20 ஆயிரம் ரூபாய் வருமானம் கிடைப்பதால், ஒரு மரத்தை வெட்டச் சொன்னால் கூட, ஒன்றிரண்டு மரங்களை ஊழியர்கள் வெட்டி விடுகின்றனர். சமீபகாலமாக 20க்கும் மேற்பட்ட மரங்கள் வெட்டப்பட்டுள்ளன. பட்டுப்போன மரத்தை வெட்டுகிறோம். மழை காரணமாக சில மரங்கள் சாய்ந்து விழ வாய்ப்பு
உள்ளது என்று கூறி, சமீபத்தில் மரங்கள் கபளீகரம் செய்யப்பட்டுள்ளன. இதனால், பசுமை வழி குடியிருப்பில் இருக்கும் வானுயர்ந்த மரங்கள் கண்ணீர் வடிக்கத் துவங்கியுள்ளன.

வாழையும், வேர்கடலையும்: சமீபத்தில் நடந்த அமைச்சரவை மாற்றத்தில் முக்கிய இலாகாவை இழந்த, மூத்த அமைச்சர் வீட்டைச் சுற்றியிருந்த மரங்கள் அனைத்தும் வெட்டப்பட்டுள்ளன. இங்கு வாழைத்தோப்பும், வேர்கடலை செடியும் நடுவதற்கு திட்டமிட்டுள்ளனர். இந்நிலையிலும், எட்டுக்கும் மேற்பட்ட அமைச்சர்களுக்கு இன்னும் வீடு ஒதுக்கப்படாததால், சேப்பாக்கம் விருந்தினர் மாளிகையில் தங்கியிருக்கின்றனர். எங்களுக்கு வீடு ஒதுக்குங்கள் என இவர்களாக போய் கேட்காமல் இருக்கின்றனர். கிடைக்கிறப்ப கிடைக்கட்டும் என்று நிம்மதியாக இருக்கின்றனராம். அடுத்த அமைச்சரவை மாற்றம் வந்தால், எத்தனை பேர் காணாமல் போவோமோ என, பசுமை குடியிருப்பில் உள்ள மரங்கள் பயப்படத் துவங்கியுள்ளன.  

b